சிறையில் கைதிகளை கண்காணிக்க வேண்டும்


சிறையில் கைதிகளை கண்காணிக்க வேண்டும்
x

சிறையில் கைதிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு பயிற்சி மைய இயக்குனர் கூறினார்.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகம் (ஆப்கா) அமைந்துள்ளது. இங்கு கேரளா, சிக்கீம், டெல்லி, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் 22 சிறை அதிகாரிகளுக்கான 9 மாத அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பேராசிரியர் மதன்ராஜா பயிற்சி குறித்து விளக்கி கூறினார்.

சிறப்பு விருந்தினராக ஐதராபாத்தில் உள்ள மத்திய புலனாய்வு பயிற்சி மைய இயக்குனர் கிராந்திகுமார்காதிதேசி கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், சிறையில் பணியாற்றும்போது கவனமுடன் பணியாற்ற வேண்டும். உடல் நலன், குடும்ப நலன் முக்கியம். வேலையோடு சேர்த்து குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் உள்ளே தான் இருக்கிறார்கள் என்று எண்ணி விடக்கூடாது. அவர்கள் வெளி உலகுடன் தொடர்பில் தான் இருப்பார்கள். இதன் மூலம் கூட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே கவனக்குறைவாக பணியாற்ற கூடாது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்றார்.

முடிவில் பேராசிரியை பியூலாஇமானுவேல் நன்றி கூறினார்.


Next Story