குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு


குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே வக்கீல் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அருகே வக்கீல் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது.

வக்கீல் கொலை

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் சிவக்குமார் (வயது 44). இவர் கடந்த 23-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு காரில் கிடந்தார். இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார் அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பொய் கூறி அழைத்து வந்தனர்

தர்மபுரி வக்கீல் சிவக்குமாரை தொடர்பு கொண்ட நபர்கள், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்கள் குட்கா வாகனம் சிக்கியதாக கூறி அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அன்று அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. மேலும் குட்கா வழக்கில் எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

வக்கீல் சிவக்குமாருக்கு சமீப காலமாக சிலருடன் பிரச்சினை இருந்துள்ளது. அதில், சிலர் திட்டமிட்டு அவரை அழைத்து சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோர்ட்டில் சரண் அடைய திட்டம்

மேலும் வக்கீல் சிவக்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள், கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வக்கீலை கொலை செய்து உள்ளதால் சக வக்கீல்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆக கூடாது என்றும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story