விபத்தில் காயமடைந்த தனியார் வங்கி ஊழியர் சாவு


விபத்தில் காயமடைந்த தனியார் வங்கி ஊழியர் சாவு
x

விபத்தில் காயமடைந்த தனியார் வங்கி ஊழியர் சாவு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை கிருஷ்ணன்புதூர் லலிதாம்பிகை நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது34). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி இரவு மதுசூதனன் விசுவாசபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே மீன் பாரம் ஏற்றிவந்த மினி டெம்போ மோதியது. இதில் மதுசூதனன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மதுசூதனன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக டெம்போ டிரைவர் உதயகுளத்தாங்கரையை சேர்ந்த ஷெஜின் என்பவர் மீது ஆரல்வாய்ெமாழி போலீசார் வழக்குபதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதுசூதனனுக்கு தேவிபாலா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.


Next Story