ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு


ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு
x

ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

சேலம்

ஓமலூர்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரிக்கு நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ்சில் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்்த ஒருவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏறி பண்ணப்பட்டி பிரிவுக்கு டிக்கெட் எடுத்ததாக தெரிகிறது. அங்கு பஸ் நிற்காது என்றும், இடையில் நிற்காது என்று கூறியும் அவரை இறக்கி விட்டு உள்ளனர். இது குறித்து அவர் பண்ணப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பஸ் தர்மபுரி சென்று விட்டு திரும்பி சேலம் வரும்போது பண்ணப்பட்டி பிரிவு அருகே பொதுமக்கள் வழிமறித்து சிறை பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் சிறை பிடித்த பஸ்சை பொதுமக்கள் விடுவித்து கலைந்து சென்றனர்.


Next Story