விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
முத்தையாபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த உமர் சாகிப் மகன் முஸ்தபா (வயது45). ஷிப்பிங் கம்பெனியில் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை முத்தையாபுரம் அருகே கடந்து செல்ல முயன்றபோது, அரசு பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story