தனியார் நிறுவன ஊழியர் பலி
தலைவாசல்:-
மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் விக்னேஷ் (வயது 21). இவர், ஆத்தூர் பகுதியில் தனியார் விதை உற்பத்தி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்துவந்தார்.
வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி மேம்பாலம் வழியாக சென்ற போது நிலைதடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ் தலைவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சாவு
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல்விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.