தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலி


தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலி
x

ஆம்பூரில் தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள ரெட்டித்தோப்பு நியூ பெத்தலேகம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். ஓய்வு பெற்ற ரெயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர். இவரது மகன் அப்துல் சலாம் (வயது 37). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்துல் சலாம் ஆம்பூர்- விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story