தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், பெரிய அணைக்கரைப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ்வரன்(வயது 23). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஷ்வரன் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் அங்கு சென்று லோகேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story