தனியார் நிறுவன என்ஜினீயர் திடீர் சாவு


தனியார் நிறுவன என்ஜினீயர் திடீர் சாவு
x

தனியார் நிறுவன என்ஜினீயர் திடீரென இறந்தார்

திருநெல்வேலி

நெல்லை உடையார்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் பால விக்னேஷ்ராஜா (வயது 33). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பாலவிக்னேஷ்ராஜா மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story