தனியார் நிறுவன சூப்ரவைசர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு


தனியார் நிறுவன சூப்ரவைசர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

தூத்துக்குடியில் தனியார் நிறுவன சூப்ரவைசர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகபூபாஷா. இவருடைய மகன் முகமது ஹாரூன் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில், கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள மூவனார் பூங்கா அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த 2 பேர் முகமது ஹாரூனை மிரட்டி, தாக்கினார்களாம். இது குறித்து முகமது ஹாரூன் தனது அண்ணன்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு அவரது அண்ணன்கள் உசேன் மற்றும் ஹசன் ஆகியோர் வந்து உள்ளனர். அதே நேரத்தில் மர்ம ஆசாமிகளுடன் மேலும் 2 பேரும் அங்கு வந்து சேர்ந்து உள்ளனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து அண்ணன், தம்பி 3 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story