தனியார் கம்பெனி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
வேலை வழங்கக்கோரி தனியார் கம்பெனி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
வேலூர்
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் லுங்கி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வேலை வழங்கும் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கம்பெனி வாசலில் முற்றுகை நடத்தினர்.
தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். கம்பெனி நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story