தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா


தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் 40 தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இவர்களின் ஒப்பந்த காலம் நாளை மறுநாளுடன்(வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. அன்றைய தினம் வரை மட்டுமே 40 பேரும் பணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. பாதுகாப்பு தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைமை நிர்வாகிகள் இணைந்து என்.எல்.சி. நிறுவன தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்களின் போராட்டம் இரவு 12 மணியை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story