விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி


விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி
x

திருவாரூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்தார்

திருவாரூரை அடுத்த திருநெய்பேர் பகுதியை சேர்ந்தவர் அருண்சந்தர் (வயது 38). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதைப்பார்த்து ஓடி வந்து அருண்சந்தரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர்.

சிகிச்சை

விசாரணையில் அவர் போலீசாரிடம் தனது உறவினர்கள் சொத்து பிரச்சினை தொடர்பாக தன்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தேன் என்றும் கூறினாா்.இதனையடுத்து அருண்சந்தரை போலீசார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story