தஞ்சையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தஞ்சையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆலோசனை

முகாமில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இந்த முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு நடக்கிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைஅளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story