தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
x

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அலுவலக வளாகத்திலேயே நடைபெறும் இந்த முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

கல்விச்சான்றுகள்

இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். மேலும்விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story