தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நெல்லையில், நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதன் மூலம் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் பங்கேற்போர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இதுதவிர போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அனைத்து போட்டி தேர்வுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்து உள்ளார்.