கார் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
ஆரணி அருகே கார் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் சின்னசாயக்கார தெருவை சேர்ந்த ராமு என்பவரின் மகன் லோகநாதன் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
லோகநாதன் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் இன்று ஆரணியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அரியப்பாடி அருகே செல்லும்போது ஆரணி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லோகநாதனை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story