தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
குலசேகரம் அருகே கடன் பிரச்சினையால் விஷ மாத்திரை தின்று தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே கடன் பிரச்சினையால் விஷ மாத்திரை தின்று தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிதி நிறுவன ஊழியர்
குலசேகரம் அருகே உள்ள அரியாம்பகோட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32), தனியார் நிதி நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ரெஞ்சிதா (27). இவர் கிளை தபால் நிலையம் ஒன்றில் ஊழியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சதீஷ் திற்பரப்பு அருகே கடன் வாங்கி புதிதாக வீடு கட்டி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் சதீசுக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது, தென்னை மரங்களில் வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது மனைவி மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.