தனியார் நிதிநிறுவன ஊழியர் பலி


தனியார் நிதிநிறுவன ஊழியர் பலி
x

லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், தனியார் நிதிநிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அண்ணாநகரை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 33). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், தாடிக்கொம்புவில் இருந்து வேடசந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவுரிசங்கர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவுரிசங்கர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து செம்பட்டி பாறைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் ( 40) மீது, வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story