தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை
திண்டுக்கல்லில், தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி அருணாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்தார். இவருடைய மனைவி அன்னபூரணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சிவக்குமார் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story