தனியார் பள்ளி பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
தனியார் பள்ளி பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள பழையகடை வலிய கருங்கண்ணிவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ஜாண் (வயது 53). இவருக்கு பெல்ஸ் மேரி (49) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்கள் 2 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. மிக்கேல் ஜாண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மிக்கேல் ஜாண் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மனைவி பெல்ஸ் மேரியிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மிக்கேல் ஜாண் விஷம் குடித்து இருப்பதாக ெதரிவித்தனர்.
இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மிக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மிக்கேல் ஜாணின் மனைவி பெல்ஸ் மேரி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், மிக்கேல் ஜாண் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.