தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆடங்களை தேர்வு செய்ய உள்ளன.
முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுனர், பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதில் கலந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இத்தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story