தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ந் தேதி (சனிக்கிழமை) கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து நடத்தப்படுகிறது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055904, 9750975354 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story