பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூரில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர், தூய நெஞசக் கல்லூரி வளாகத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. முகாமில் 12-ஆம் வகுப்பு (2021 அல்லது 2022-இல் முடித்த) படித்த பெண்கள் மட்டும் கலந்துக்கொள்ளலாம்.
அவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கும் மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இந்்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story