பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் 16 பேருக்கு பரிசு


பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் 16 பேருக்கு பரிசு
x

அண்ணா- பெரியார் பிறந்தநாளையொட்டி, குமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 16 பேருக்கு பரிசு வழங்கப்படுவதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அண்ணா- பெரியார் பிறந்தநாளையொட்டி, குமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 16 பேருக்கு பரிசு வழங்கப்படுவதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சுப்போட்டி

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி குமரி மாவட்டத்தில் கடந்த 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டதி பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. பள்ளிகளின் சார்பில் 40 பேரும், கல்லூரிகள் சார்பில் 15 பேரும் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 16 பேர் பரிசு பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பாிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

பள்ளி- கல்லூரி மாணவர்கள்

அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் பரிசை கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி வன அஜிஸ்னா, 2-ம் பரிசை மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆன்சிலின் ஷேகா, 3-ம் பரிசை வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி லேகா மற்றும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரத்தை கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வினயாசுமி சிவா, பூதப்பாண்டி சர்.சி.பி.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர் பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசை முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி முதுகலை ஆங்கிலம் (இரண்டாமாண்டு) மாணவி விஜித்ரா, 2-ம் பரிசை நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி இளங்கலை தமிழ் (முதலாமாண்டு) மாணவி அகல்யா, 3-ம் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி முதுகலை ஆங்கிலம் (முதலாமாண்டு) மாணவி ஷெரின் ஆகியோர் பெற்றனர்.

பரிசு தொகை- சான்றிதழ்

தந்தை பெரியார் பிறந்தநாளான கடந்த 17-ந் தேதியன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசை மாடத்தட்டுவிளை புனித லாறன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி நிபிஷா, 2-ம் பரிசை சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா, 3-ம் பரிசை நாகர்கோவில் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிகா, சிறப்பு பரிசுகளை திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பாபுல் உசேன் மற்றும் மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அக்சயா ஆகியோர் பெற்றனர்.

இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டாமாண்டு) மாணவி டெபி டேஷி, 2-ம் பரிசை தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி இளங்கலை வணிகவியல் (முதலாமாண்டு) மாணவி சுவாதி, 3-ம் பரிசை முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டாமாண்டு) மாணவி வின்சி ஆகியோர் பெற்றனர். பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story