மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் மற்றும் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கத்தின் தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார். உடனடி முன்னாள் தலைவர் பாண்டியன், முன்னாள் செயலாளர் சத்தியபால், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரைடு ரோட்டரி சங்க தேர்வு தலைவர் சரவணன் வரவேற்றார். பிரைடு ரோட்டரி உதவி ஆளுநர் டாக்டர் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் தியாகராஜன், அஜய், மதிய உணவு அன்னபூர்ணா திட்ட செயலாளர் ரகுபதி ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story