நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கு பரிசு
காட்பாடி அரசு மகளிர் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வேலூர்
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவிகளின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நடந்தது. முகாமில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சரளா தலைமை தாங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சுதா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் சித்ரா லோகநாதன், சித்ரா மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமஸ், உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து உள்பட பலர் பேசினர்.
முடிவில் உதவி திட்ட அலுவலர் கவுசல்யா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story