10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

கோக்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் குண்டலப்பல்லி ஊராட்சி கோக்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் தொடர்ந்து 9-வது ஆண்டாக 2022-23-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கக்தொகை, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் பாஸ்கரன் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில் நிதியாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஷைனிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், மாணவன் செல்வகுமார், மாணவி அதிசயா ஆகியோருக்கு 2-ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், மாணவி காவ்யாவிற்கு 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டி பேசினார்.

ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சந்திரசேகர் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் இனிப்பு வழங்கினர்.

விழாவில் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story