பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு


பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு
x

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக 15 வயதிற்கு மேற்பட்ட முற்றும், எழுத படிக்கத் தெரியாதோருக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை வட்டார கல்வி அலுவலர்கள் மாகாளி, ராஜலட்சுமி ஆகியோர் தலைமை தொடங்கி வைத்தனர்.

இதில் சுலோகன் எழுதுதல் போட்டியும், ஆசிரியர்களுக்கு சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story