கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் தி.மு.க சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. நகர செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு (கிழக்கு), முத்துகிருஷ்ணன் (மேற்கு), வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்த சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியினை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். போட்டியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100 அணிகள் கலந்து கொண்டன.

இதில் வீரவநல்லூர் முத்துசாமி பிரதர்ஸ் கபடி குழு முதல் பரிசை பெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நகர துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை ஆகியோர் வரவேற்றனர். நகர பொருளாளர் முத்துக்குமார் தொகுப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், துணை தலைவர் ஆனந்தலட்சுமி, மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்து குமார், சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரவநல்லூர் இளைஞர் அணி அமைப்பாளர் பிச்சைக்கண்ணு, மாவட்ட விவசாய அணி சுபாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீரவநல்லூர் பேரூர் கழகம் மற்றும் முத்துசாமி பிரதர்ஸ் கபடி குழுவினர் செய்திருந்தனர்.


Next Story