பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு பரிசு தொகை-விருது
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு பரிசு தொகை-விருது வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
ீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடையை கடைபிடித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றிய பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மஞ்சப்பை, துணி பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பயன்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய 3 சிறந்த பள்ளி, 3 சிறந்த கல்லூரி மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். விருது பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-ம் பரிசாக ரூ.5 லட்சம், 3-ம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக முன்மாதிரியாக திகழும். பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://ramanathapuram.nic.in) பதிவிறக்கம் செய்து 1.5.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.