கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கடையநல்லூரில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
கடையநல்லூர்:
கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு, விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் சையத் அலி, மாநில மேலாண்மை குழு உறுப்பினர் முகமது யூசுப், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர் ஜலாலுதீன், செய்யது அலி, அப்துல் பாசித், பீர் மைதீன், புளியங்குடி பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எம்.எஸ்.சுலைமான், மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி கலந்து கொண்டு பேசினர்.
என் பார்வையில் முகமது நபி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு பிரீசரும், இரண்டாவது பரிசு வாஷிங் மெஷின், மூன்றாவது பரிசு கியாஸ் அடுப்பு மற்றும் போட்டியில் கலந்து கொண்ட 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் கிளைத்தலைவர்கள் அப்துல் ஜப்பார், பாரூக், நிரஞ்சன் ஒலி, சேகனா, குல்லி அலி, முகம்மது அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகள் செய்தனர்.