போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
திருவாரூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ பரிசு வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 215 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.17 ஆயிரமும், தலா ரூ.4800 மதிப்பிலான காது கேட்கும் கருவி 5 பேருக்கும் ஆக மொத்தம் ரூ.41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாளையொட்டி நடந்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.