கலைப்பொருட்கள் தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


கலைப்பொருட்கள் தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x

அம்பையில் கலைப்பொருட்கள் தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி சார்பில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம் எனும் அமைப்பின் கீழ் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல்கட்டமாக நகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து கழிவுகளில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பள்ளியிலும், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமையில், ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலையில் அம்பை நகராட்சி வளாகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story