கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுமாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்
கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாிசு வழங்கினார்
கையெழுத்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பரிசு வழங்கினார்.
கையெழுத்து போட்டி
ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கான கையெழுத்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. போட்டியை முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். இதில் 210 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டியில், வலையபாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கூட மாணவி செ.கிருபாசினி முதல் இடமும், பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் வெ.ஜெய்நிகேஷ் 2-ம் இடமும், அம்மாப்பேட்டை டேலண்ட் பதின்மப்பள்ளிக்கூட மாணவி ச.லக்ஷனா 3-ம் இடமும் பிடித்தனர்.
பாராட்டு சான்றிதழ்
மேலும் எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டியில், ஈரோடு வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட மாணவி சே.ஹேமலதா முதல் இடமும், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட மாணவி ரா.ஸன்மதி 2-ம் இடமும், அறச்சலூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூட மாணவி ஜெ.தர்ஷினி 3-ம் இடமும் பிடித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ரெஜினாள் மேரி, முதுகலை தமிழ் ஆசிரியர் கந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் நாகராஜ், ஓவிய ஆசிரியர் சந்திரன் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.