கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள விட்டாநிலைப்பட்டி மற்றும் பாணிப்பட்டி இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டி விட்டாநிலைப்பட்டியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.
இதில் முதல் பரிசை உடையாண்டிப்பட்டி அணியும், 2-வது பரிசை விட்டாநிலைபட்டி அணியும், 3-வது பரிசை நரியப்பட்டி அணியும், 4-வது பரிசை சாங்கிராப்பட்டி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பைகள், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. கிரிக்கெட் போட்டிகளை இலுப்பூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.