கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

கட்டுமாவடி ராமநாத சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழாவையொட்டி ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

பல்வேறு சுற்றுக்களாக நடந்த இந்த போட்டியில் சிவகங்கை அணி முதலிடம் பிடித்தது. 2-வது பரிசை காரைக்குடி அணியும், 3-வது பரிசை கட்டுமாவடி அணியும், 4-வது பரிசை கணேசபுரம் அணியும் பிடித்தது. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.


Next Story