கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
காரையூர் அருகே காயாம்பட்டியில் 22-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை பரம்பூர் மேட்டுப்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை புதுக்கோட்டை மலையப்பா நகர் அணியினரும், மூன்றாம் பரிசை புதுப்பட்டி அணியினரும், நான்காம் பரிசை மூவராயன்பட்டி அணியினரும் பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காயாம்பட்டி, ஒலியமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story