போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட ரெட்டியார் நல அறக்கட்டளையின் 41-வது பொதுக்குழு கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. தலைவர் சந்திர பால் வரவேற்றார். செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் கிருஷ்ணகுமார் நிதி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ் செல்வி, தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டி சீனியர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற ஜெயராணி, ஜூனியர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற பாமினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கோப்பையினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பராஜ், சங்கத்தின் துணைத்தலைவர் வெள்ளையா, சுப்பாரெட்டியார், சாத்தூர் வட்டார சங்கங்கள் மற்றும் அருப்புக்கோட்டை ரெட்டி கிளை சங்கங்கள் சார்பாகவும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சங்கத்தின் இணைச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story