போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவாரூர் புத்தகத்திருவிழாவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்
கொரடாச்சேரி:
திருவாரூரில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் திருவாரூர் புத்தகத்திருவிழா நடைபெற்றது. இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விழாவில் தினமும் சிறந்த தமிழறிஞர்களைக்கொண்டு புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, விமர்சனப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ பரிசுகள் வழங்கினார். இதில் செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தக சேகரிப்பு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 9 நாட்கள் நடந்த புத்தகத்திருவிழாவில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.