கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கடையத்தில் கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி
கடையம்:
கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில், பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழா தலைவர் இசைகவி ரமணன் கலந்து கொண்டு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில் திருவள்ளுவர் கழகச் செயலாளர் கல்யாணி சிவகாமிநாதன், பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் நீலகண்டன், தென்காசி ராமகிருஷ்ண சேவா சங்க நிறுவனர் அறிவழகன், கடையம் திருவள்ளுவர் கழகத்தலைவர் சேது ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரவணசமுத்திரம் சேவாலயா பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story