பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாமிரவருணி தமிழ் வனம், பாரதியார் இலக்கிய கழகம் சார்பாக, பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கினார். தாமிரவருணி தமிழ் வனம் தலைவர் ஏ.ஆர்.லட்சுமணன் வரவேற்று பேசினார்.

வ.உ.சி.யின் பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம், மகாகவி பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். முதுகலை கணினி ஆசிரியர் செந்தில்குமார், வாழ்கிறார் வ.உ.சி என்ற தலைப்பில் பேசினார். பட்டிமன்ற பேச்சாளர் ஐ.எஸ்.பர்வீன் சுல்தானா, வல்லமை தாராயோ என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாமிரவருணி தமிழ் வனம் செயலாளர் சொக்கலிங்கம், மகாகவி பாரதியார் இலக்கிய கழக தலைவர் வள்ளி முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story