விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறுகையில், விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் பங்கு பெற்று சாதனை புரிந்திருக்கக்கூடிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு மின்வாரியம் உள்பட பல துறைகளில் அரசு வேலைவாய்ப்பை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்ல கூடியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் நிச்சயமாக நாங்கள் செய்வோம், என்றார்.
Related Tags :
Next Story