மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம்
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு பாலக்கோட்டில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைப்பெற்றது. ஊர்வலத்ைத பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் காந்திஜி, நேதாஜி, நேரு, படேல், பாரதியார், பாரதமாதா, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கொண்டு வந்தே மாதரம் முழக்கமிட்டபடி ஸ்தூபி மைதானம், பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு, தக்காளிமண்டி வழியாக ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரிமா சங்கத்தினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story