போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருள் குறித்தும், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கல்லூரியில் தொடங்கி பஸ் நிலையம், நீதிமன்றம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக போலீஸ் நிலையத்தை சென்றடைந்து மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இதில் கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு குழு அலுவலர் ஜெயராமன், துறைத்தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story