ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் ஆர்.எஸ்.எஸ். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், தாயுமானவர் தபோவனம் தலைவர் சுவாமி ருத்ரானந்தா மகாராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், வக்கீல்கள் ரமேஷ்கண்ணன், ராஜேஷ்கண்ணன், நிர்வாகி பிரபு, உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனையை அடைந்தது. இதில், இஸ்லாமியர் ஒருவர் மலர் தூவி வரவேற்று பாரத் மாதா கி ஜே என்று குரல் எழுப்பி உற்சாகப்படுத்தியது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.