அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலம்


அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலம்
x

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை, ஜூலை.25-

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று மாலை ஊர்வலம் நடத்தினர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் இரா.ரெங்கசாமி பேசினார். மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரையாற்றினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்டவைகளை திரும்பக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அண்ணா சிலை வழியாக முக்கிய வீதிகள் சென்று மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story