அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.

கரூர்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் அன்பழகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை ரத்து செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story