புனித ஜெபமாலை அன்னை பல்லக்கு ஊர்வலம்
பெரியசாமிபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்திலுள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு வாண வேடிக்கையுடன் நடைபெற்ற அன்னையின் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட புனித ஜெபமாலை அன்னையின் பல்லக்கு ஊர்வலத்தில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பாடல்கள் பாடியவாறு அன்னையை ஜெபித்தனர். இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
Related Tags :
Next Story