அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் நீராவி என்ஜின் வடிவில் மின்சாரத்தில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிப்பு


அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் நீராவி என்ஜின் வடிவில் மின்சாரத்தில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிப்பு
x

அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் நீராவி என்ஜின் வடிவில் மின்சாரத்தில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

சென்னை

ரெயில் என்ஜீன் தயாரிப்பு

ஆவடி அடுத்த அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் பழைய காலத்து நீராவி என்ஜின் வடிவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு மேல் இந்த ரெயில் என்ஜின் தயாரிப்பு பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களும் இணைந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2 என்ஜின்கள் மட்டும் பொருத்தப்பட்ட இந்த ரெயில் என்ஜினில் 4 குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் உள்ளது. அவைகளில் ஒன்று கேட்டரிங் பயன்பாட்டிற்காகவும், மீதமுள்ள 3 பெட்டிகள் பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு இந்த நீராவி என்ஜின் போன்று தோற்றமளிக்கும் புதிதாக தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் இருந்து பூஜை போடப்பட்டு ரெயில்வே அதிகாரிகள் முன்னிலையில் அரக்கோணம் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.


Next Story